நிறைய பேர் தங்களின் சரும நிறத்துக்கு எதிர்மறையான ஹேர் கலர்களை தேர்வு செய்யலாமா என்று ஆலோசிக்கின்றனர். நல்ல ஐடியாதான்! இருந்தாலும் அழகியல் நிபுணர்களோடு கலந்து ஆலோசித்த பின் உங்களுடைய ஃபேவரைட் ஹேர் கலரை தேர்ந்தெடுத்து கலர் செய்து கொள்ளலாம்.
ஹேர் கட் செய்துகொள்ளும் வழக்கம் பெண்கள் மத்தியில் இருந்தாலும், இன்றளவும் பெரும்பாலானவர்கள் தங்களுடைய கூந்தலின் நீளத்தை மனதில் வைத்து ஹேர் கட் செய்யவே தயங்குகிறார்கள். கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவே ஹேர் கட் செய்து கொள்ளப்படுகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
மனதின் ஆரோக்கியத்துக்கு மனதைக் குளுமையாக வைத்துக்கொள்வது போல தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு எண்ணெய் தேய்த்துக் குளுமையாக வைத்துக்கொள்ளுதல் அவசியமானதாகும்.
முடி உதிர்வு பிரச்னை சற்று தீவிரமான நிலையில் உள்ளவர்கள், பிரச்னையின் காரணிகள் என்னவாக இருக்கும் என்பதை ஆராய வேண்டியது அவசியம்.