வாழ்நாள் முழுவதும் நம் நினைவில் இருக்கப்போகும் நாளல்லவா ஒருவரின் திருமண நாள். பார்வைகள் முதல் பரிகாசங்கள் வரை அனைத்துமே நூறு வருடங்கள் ஆனாலும் மறக்காதே. அப்படி இருக்க உங்கள் துணைவரின் கண்களுக்கு நீங்கள் தேவதையாகக் காட்சி தர வேண்டாமா!?
சேலைகளுக்கு ஏற்ற நகைகளும், அதற்கேற்ற ஆக்ஸசரீஸும் எடுப்பதில் தான் ஒரு மணப்பெண்ணின் மொத்த தோற்றமும் அடங்கி இருக்கிறது.
ஆரோக்கியம்தான் உண்மையான அழகு. உடலில் எனர்ஜியும், மனதில் உற்சாகமும் இருந்தால், சருமத்திலும் தலைமுடியிலும் தானே அது பிரதிபலிக்கும். திருமணத்தன்று தன்னம்பிக்கையும் உற்சாகமுமாய் போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம்!
சினிமா நட்சத்திரங்கள் என்றாலே நமக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி வந்துவிடும். நாம் கொண்டாடிவருகிற நடிகைகள், அவர்களின் திருமணத்தில் அணிந்திருந்த சேலை, அத்துடன் அணிந்திருந்த நகைகள் மற்றும் ஆக்சஸரீஸ் பற்றி பார்ப்போம்.!